பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தில் வீதி யோரங்களில் சிலைகள் அமைக்க முடியாது.

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் அனுமதியின்றி வீதியோரங்களில் சிலைகள் சுரூபங்கள் வளைவுகள் அமைக்கப்படுமாகில் அவைகள் பொலிசாரின் உதவிகளுடன் அகற்றப்படும். அத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள புனித ஸ்தலங்களான திருக்கேதீஸ்வரம் ஆலயம், மடு ஆலயப் பகுதிகளில் வேறு மதத்தினர் மதத்தளங்கள் சிலை சுரூபங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சமாதான ஆலோசனை சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட உதவி செயலாளர் வீ.பபாகரன் சமர்பித்தார்.

வியாழக்கிழமை 03.08.2017 அன்று மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மன்னார் மாவட்டச் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு வரவேற்பு உரையின் பின் இணைத்தலைவர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொறுப்பேற்று இவ் கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
இவ் அமர்வில் பாராளுமன்ற குழு பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினாகள்; சிவசக்தி ஆனந்தன், எம்.எம்.மஸ்தான், வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் ஐ_.குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட உதவி செயலாளர் வீ.பபாகரன் இங்கு தெரிவிக்கையில்
மாவட்ட ரீதியில் ஒரு சமாதான ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சுற்று நிருபம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைய இதன் தலைவராக அரசாங்க அதிபரும் இவருடன் மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அனைத்து மதங்களின் மதத் தலைவர்களும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலிருந்தும் இரு பிரதிநிதிகளும் இவ் குழுவில் அங்கம் வகிப்பர்.
இதற்கமைய ஆலோசனை சபை அன்மையில் கூடியபோது இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை இவ் மாவட்ட ஒருங்கினைப்பு குழுக்கூட்டத்தில் சமர்பிக்கப்படுகிறது.

அதாவது மன்னார் மாவட்டத்தில் வீதியோரங்களில் எந்தவிதமான சுரூபங்கள் சிலைகள் வளைவுகளோ அமைக்கப்படக் கூடாது எனவும், சில வேளைகளில் புதிதாக அமைக்கப்படும் கிராமங்களில் சமய ரீதியான வணக்க ஸ்தலங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுமாகின் பிரதேச செயலாளருக்கு ஊடாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுதான் மதத் தளங்களும் வளைவுகளும் சிலைகளோ அமைக்கப்பட வேண்டும் எனவும்
இவ்வாறு இதை மீறி செயல்பட்டால் பிரதேச செயலாளர் பொலிசாரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுவார் எனவும்
அத்துடன் 400க்க மேற்பட்ட சுரூபங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவைகள் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும்
இவைகள் இயற்கையாகவோ அல்லது வேறு எதாவது மூலம் பாதிப்பு ஏற்பட்டால் இவற்றை புனரமைக்க வேண்டும் பட்சத்தில் முன்பு எந்த நிலையில் இருந்ததோ பிரதேச செயலாளரின் அனுமதியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
திருக்கேதீஸ்வரம் ஆலயம் மடு கோவில் ஆகியன புனித பூமிகளாக இருக்கின்றபடியால் எதிர்காலத்தில் இவ்விடங்களில் வேறு மதத்தினரின் மதத்தளங்கள் சிலை சுரூபங்கள் அமைக்கக்கூடாது என்றும்
மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்ட இவ் சமாதான ஆலோசனை உபக்குழு ஒன்று ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்றும்
இது விடயமாக பொது மக்களுக்கு ஊடகங்களூடாக தெரிக்கப்படுவதற்காகவும் இவ் தீர்மானங்கள் சமர்பிக்கப்படுவதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

சகவாழ்வு அமைச்சர் முகநூலில் இனவாதம் பேசுகின்றார்.

wpengine

முறையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

wpengine

சமூக மாற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் பிரார்த்திப்போம்! மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன்

wpengine