பிரதான செய்திகள்

மன்னார் மனிதப் புதைகுழி விலங்கால் கால்கள்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடு மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த மார்ச் மாதத்தில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் 113 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் ஊடாக இதுவரையில் 266 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

260 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது விலங்கால் கால்கள் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முழங்காலுக்கு கீழ் பகுதியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ச தலைமையில் தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக இலங்கை பெண்

wpengine

வவுனியா மரக்கடத்தல் வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீசார் . .!

Maash

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

wpengine