பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு! பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா

மன்னார்,மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் ஊடாக நானாட்டான் செல்லும் பிரதான சந்தியில் உள்ள பயணிகள் தங்குமிடம் சேதமுற்ற நிலையில் உரிய பராமறிப்பு இன்றி காணப்படுவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னார் பிரதேச சபையின் பிரிவின் கீழ் உள்ள குறித்த பயணிகள் தங்குமிடத்தின் மேல் கூரைகள் உடைந்து சேதமான நிலையில் காணப்படுவதோடு, உரிய பராமறிப்பு இன்றி தூய்மை அற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனால் குறித்த கிராமத்தில் இருந்து போக்குவரத்திற்காக காத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் , வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என உற்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் குறித்த பயணிகள் தங்குமிடத்தில் நின்றே பேரூந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மழைக் காலம் என்பதினால் பயணிகள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பயணிகள் தங்குமிடம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் மன்னார் பிரதேச சபை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என மக்கள்; விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இவ்விடையத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

wpengine

பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் வானிலையில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்க விசேட திட்டம்.

Maash

மன்னார் மாவட்டத்தில் வீதி யோரங்களில் சிலைகள் அமைக்க முடியாது.

wpengine