பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! விசனம் அடைந்த இணைக்குழு தலைவர்கள்

மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் என்.பரமதாஸன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று மன்னார் மாவட்ட பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

அத்தோடு இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிவாங்கிகள் உரிய முறையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உரையாற்றியவர்களின் கருத்துக்களை கேட்க முடியாத நிலை அசமந்த நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களில் முக்கியமான துறைகளைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் சமூகம் தராமை குறித்து இணைத்தலைவர்கள் விசனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

Editor

தற்போதைய அரசாங்கம் செய்த எந்த அபிவிருத்தி திட்டத்தையும் மக்கள் காணவில்லை

wpengine