பிரதான செய்திகள்

மன்னார் ,தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து புதிய கைக்குண்டு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (10) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதான பிரதான வீதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்தே இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த போது காணியின் சுற்று வேலிக்கு அருகாமையில் இருந்து இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த மன்னார் பொலிஸார் மற்றும்இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கைக்குண்டை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

Related posts

மன்னார் துறைமுக நிர்மான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Maash

அமைச்சர் றிஷாட்டின் மீள்குடியேற்றதை தடுக்கும் முஸ்லிம் அமைச்சரும்,தமிழ் அரசியல்வாதிகளும்

wpengine

வீட்டுத்திட்ட பயனாளர்களுக்கு உதவி.

wpengine