பிரதான செய்திகள்

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் ஆலய திருநாள் திருப்பலி இன்று அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி. கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

குரு முதல்வருக்கு கிராம மக்களால் மிகுந்த மதிப்பளிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார். இதில் அயல் கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புனித சூசையப்பரின் அருளையும் ஆசிரியரையும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும்.மக்கள் வாழ வேண்டும்- சஜித்

wpengine

தேவையான திருத்தங்களைச் செய்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிப்போம்!-விஜேதாஸ ராஜபக்ஷ-

Editor