மன்னார் பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக இயக்குனர் திரு. அன்று அவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் மன்னார் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் இதன் இயக்குனரால் மாணவிகள் பாலியல் வல்லுறவு சேட்டைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்து மன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
அதாவது மன்னார் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்கப்போகும் மாணவிகள் ஒரு சிலர் மீது அவ் கல்வி நிறுவன இயக்குனர் திரு.அன்று பாலியல் வல்லுரவுக்கு ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்த சம்பவம் பொலிசில் முறையீடு செய்த போதும் பொலிசார் இவ்விடயத்தை அசமந்த போக்கில் விட்டுள்ளதாகவும் பின் இது விடயமாக முறைப்பாட்டாளர்.
பின்னர் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவன இயக்குனர் திரு அன்று கடந்த 29ம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிபதி முன் ஆஐர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ் வழக்கானது திங்கள் கிழமை (18.04.2016) மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது வழக்காளி சார்பாக சட்டத்தரனிகள் அன்ரன் புனிதநாயகம், திருமதி மங்கலேஸ்வரி கவிதா, ரி.வினோதன், திருமதி ரணித்தா ஞானராஜா ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.
இவ் வழக்கில் வழக்காளி சார்பாக ஆஐரான சட்டத்தரனி அன்ரன் புனிதநாயகம் தனது வாதத்தில் சந்தேக நபராக இங்கு காணப்படும் தொந்தரவு செய்து வருவதாகவும் இதில் ஒருவரான திரு.அன்று கல்வி நிறுவன இயக்குனர் தனது உறவினர் நண்பர்கள் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் வசந்தன் ஆகியோர் மூலம் இவ் வழக்கை வாபஸ் பெறுமாறு வளக்காளியை அச்சுறுத்தும் வகையில் பேசப்பட்டுள்ளதால் வழக்காளியும் அவரை சார்ந்தவர்களும் அச்சத்துக்குள்ளாகி இருப்பதால் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரியையும் இதில் ஈடுபட்டவர்களையும் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பொறுப்பில் விசாரனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்கு நீதிபதி கட்டளையிடுகையில் மன்னார் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதிலும் தங்களின் வேறு நோக்கங்களுக்காகவுமே தனியார் கல்வி நிறுவனங்களை நடாத்தி வருவதாக தெரியவருகிறது.
இந்த தனியார் நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை பிற்பகலிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வகுப்புக்கள் நடாத்துவதால் குறிப்பிட்ட இவ் தினங்களில் கட்டாயம் மத வழிபாடுகளில் பங்குபற்ற வேண்டிய நேரத்தில் மாணவர்கள் தங்கள் மத வழிபாட்டுகளில் பங்குபற்ற முடியாத நிலை இருந்து வருவதாக தெரியவந்திருப்பதால் மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலும் ஞாயிறு தினங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புக்கள் நடாத்தக் கூடாது என உத்தரவுட்டதுடன் சிறுவர் நன்னடத்தை பொலிஸ் பிரிவுனர் இவ்விடயத்தை கண்காணிக்கும்படியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் வழக்காளியை இவ் வழக்கை வாபஸ் பெறுமாறு கோரி வழக்காளிக்கு தொந்தரவு செய்த மன்னார் பிரதேச செயலாளர் திரு.வசந்தன் உட்பட ஏனையோரையும் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரனை செய்து இவர்களை நீதிமன்றில் ஆஐராக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
அத்துடன் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபரான தனியார் கல்வி நிறுவன இயக்குனர் திரு அன்று அவர்களை எதிர்வரும் 02.05.2016 வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
http://www.thaainews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/