Breaking
Thu. Apr 18th, 2024

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மீதோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மீதோ முஸ்லிம்                   மக்­க­ளுக்கு துளி­யேனும் நம்­பிக்கை கிடை­யாது.

இத­னா­லேயே வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்­லிம்கள் எதிர்க்­கின்­றனர்.

இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தி­யப்­ப­டாது என ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சமஷ்டி கோரிக்­கை­யினால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்றும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­வித்தார்.

கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு மாத்­திரம் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதால் தமிழ் தேசிய              கூட்­ட­மைப்­புக்கு இன்­று­வ­ரையில் சிங்­கள, முஸ்லிம் மக்­களின் மனங்­களை வெற்­றிக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்­றி­ணைப்­பதும் சாத்­தி­யப்­ப­டாது.

சித்­திரை புத்­தாண்டு எமது நாட்டின் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நாள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே உள்­ளது. ஆனால் வடக்கின் அர­சியல் வாதிகள் அந்த நல்­ல­நா­ளிலும்                       பிரி­வி­னை­வாத கருத்­துக்­களை வெளி­யி­டு­வதால் நாட்டில் நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

தனி­நாடு என்றால் இந்­நாட்டின் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் அச்­சப்­ப­டுவர் என்ற கார­ணத்­தினால் சமஷ்டி ஆட்சி என்ற வாச­கத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வ­ராக மட்­டு­மல்­லாது முழு­நாட்­டி­னதும் எதிர்க்­கட்சி அந்­தஸ்த்தை பெற்­றுக்­கொண்­டுள்ள சம்­பந்தன் யுத்­தத்தின் விளை­வு­களை கண்ணில் கண்­டவர்.

இதனால் தமிழ் மக்கள் ஒரு­வித பய­னையும் அடை­ய­வில்லை என்­ப­தையும் அவர் அறிவார்.               அவ்­வா­றி­ருந்தும் மீண்டும் பழைய இடத்­திற்கு அவர்கள் திரும்பிச் செல்ல முற்­ப­டு­வது                                நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும்.

அத­னா­லேயே வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­வ­தையம் இவ்­விரு மாகா­ணங்கள் மொழி  அடிப்­ப­டையில்  தமிழ் பேசும் தனிப்­பி­ராந்­தி­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும்                எதிர்க்­கின்றோம்.

எவ்­வா­றா­யினும் இன்­று­வ­ரையில் சம்­பந்தன் தமிழ் மக்­க­ளுக்­கான தலை­வ­ராக மட்­டுமே                     செயற்­பட்­டுள்ளார்.

அதனால் இந்­நாட்டு சிங்­கள, முஸ்லிம் மக்­களின் நம்­பிக்­கையை அவரால் பெற்­றுக்­கொள்ள                முடி­யாது.

அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்கள் ஏற்கும் வகையில் இல்­லா­விட்டால் கடி­ன­மாக எதிர்ப்போம் என எதிர்­கட்சி தலைவர் தெரி­வித்­துள்ளார்.

சிறு­பான்­மையின் அபி­லா­ஷை­களை மட்டும் மையப்­ப­டுத்­தி­ய­தாக தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு இருக்க வேண்டும் என்றால் அவ்வாறானதொரு அரசியலமைப்பு எமது நாட்டிற்கு அவசியம் இல்லை.

அகவே இவ்வாறான குழப்ப நிலைகளை நாட்டிற்குள் தோற்றுவித்து தமிழ் மக்களை மீண்டும் பின்னடைவைச் சந்திக்கச் செய்ய வேண்டாம் என தமிழ் அரசியல் தலைமைகளிடத்தில் கேட்கிறோம் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *