பிரதான செய்திகள்

றிசாத்தைப் போன்று எவரும் பணியாற்றியதில்லை மு.கா.கட்சியின் முன்னால் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி மில்ஹான்.

மன்னார் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று, எந்த ஓர் அரசியல்வாதியும் பணியாற்றியது இல்லை என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் உயர்பீட உறுப்பினரும் ஆகிய சட்டத்தரணி மில்ஹான் தெரிவித்தார்.

மன்னார், அளக்கட்டு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே சட்டத்தரணி மில்ஹான் இவ்வாறு குறிப்பிட்டார்.

மன்னாரில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் மக்கள் பணியாற்றியுள்ள போதும், அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று செயற்பட்டதில்லை. அமைச்சர் றிசாத் ஒரு சாணக்கியமிக்கத் தலைவர். மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் துன்ப, துயரங்களைத் தீர்த்து வைப்பவர். ஏழை, பணக்காரன் என்ற பேதம் அவரிடமில்லை. அதேபோன்று இன, மத பேதமின்றி அவர் பணியாற்றி வருகின்றார். மனித நேயம் படைத்த றிசாத், மக்களின் பணிகளைத் துடைத்து வருகிறார்.

இந்த அளக்கட்டுப் பிரதேசம், முன்னர் இருந்த நிலை உங்களுக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்தில் மக்களைக் குடியேற்றும் போது, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த, உள்ளூர் அரசியல்வாதிகள் ஏளனமாகச் சிரித்தார்கள். இந்த மீள்குடியேற்றம் வெற்றியளிக்காதென சூளுரைத்தார்கள். ஆனால், இறைவனின் உதவியால் இன்று நாம் நாளாந்தம் இந்தப் பிரதேசத்தில் முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றோம். அமைச்சர் றிசாத் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. எதிர்காலத்திலே இந்த கிராமம், மன்னார் மாவட்டதின் முன்மாதிரியான கிராமமாக மாறும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று மில்ஹான் கூறினார்.

Related posts

கட்டுரைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

wpengine

முன்னால் அமைச்சர் ராஜபஷ்சவுக்கு !உலமா சபை கண்டனம்

wpengine

புதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா?

wpengine