Breaking
Wed. May 8th, 2024

அபிமன்யு-

மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை வைத்து அரசியல் நடாத்தி வரும் மனோ – திகா கூட்டம், இந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட்டின் மனைவி, அவரது மாமனார், மைத்துனர் மற்றும் உதவியாளரை கைது செய்து, தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் நடாத்தி வரும் இந்தச் சூழலிலும், இழி மனோநிலை கொண்ட மனோ – திகா கூட்டம், தொடர்ச்சியாக ஹட்டன், நுவரெலியா பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருவதன் நோக்கம்தான் என்ன? இழந்த அதிகாரக் கதிரைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக மலையகத் தமிழர்களிடம், தங்களை ஹீரோக்களாகக் காட்டும் இவர்கள், “ஏழைத் தோட்டத் தொழிலாளர்களின் விடிவெள்ளிகள் தாங்கள்தான்” என பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.

“தீக்குளித்த இந்த யுவதியின் மரணத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது நான்தான்” என தம்பட்டம் அடித்த மனோவின் கூற்றிலிருந்து, அவரின் அரசியல் நோக்கு நன்கு தெரிகின்றது.

‘இறந்த உடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும், பொலிஸ் பொறுப்பு அதிகாரியை இடமாற்ற வேண்டும்’ என்று ஊடகங்களில் கூவி, பொலிஸ் உயர் அதிகாரிகளையும் சந்தித்து நீலிக்கண்ணீர் வடித்த இந்த மனோ, அப்பாவி யுவதியின் பூதவுடலில் அரசியல் நடத்துகின்றார். இன ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கத்தும் மனோ கணேசன், முன்னரும் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைத்த சம்பவங்கள் நிறைய உண்டு.

அவிஸ்ஸாவளை, புவக்பிட்டியவில் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் ஆசிரியர்களின் பிரச்சினை உருவெடுத்த போது, இன நல்லலுறவு அமைச்சராக இருந்த மனோ கணேசன், முஸ்லிம்களை நோகடிக்கும் கருத்துக்களை வெளியிட்டு, ஹிஜாப் விவகாரத்தில் ஓரவஞ்சனையாக நடந்து, குளிர்காய்ந்தார்.

தமது கட்சி நுவரெலியா மாவட்டத்தில் அமோக வாக்குகளை பெற்றதாக பெருமை பேசும் மனோ – திகாம்பரம் கூட்டணியினர், தங்களது இரத்த பந்தங்களுக்கு போராடக் கூடாதா? என கேள்வி கேட்கின்றனர். காலாகாலமாக இரத்தத்தைக் குடிக்கும் அட்டைக் கடிக்குள், லயன் குடியிருப்புக்களில் வாழ்க்கை நடத்தும், தோட்டத் தொழிலாளர்களுக்கு, மனோவைப் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், திட்டமிட்டு உதவியிருந்தால், தமது இரத்த பந்தங்களுக்கு, இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? கொழும்பில் வந்து இவர்கள், சேவகம் செய்வதற்கு யார் பொறுப்பு?

ஏழைத் தொழிலாளார்களை உணர்ச்சிவசப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களையும் கோஷங்களையும் முன்னெடுக்கும் மனோவுக்கு, இறைவன்தான் பாடம் புகட்ட வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *