பிரதான செய்திகள்

மட்டு-கோட்டைமுனை பாலத்தில் இளைஞன் ஒருவரின் சடலம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கோட்டைமுனை பாலத்தில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று 08 வெள்ளிக்கிழமை மீட்க்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞனின் சடலம் மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் கோட்டைமுனை பாலத்தின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பாலத்தின் கீழுள்ள வாவியினுள் மிதந்தவாறே கண்டெடுக்கப்பட்ட இச் சடலம்  சுமார் 27,28 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது.
80e1b22f-2f7a-4a5b-9ba0-34e3cff9da58
குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இச் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மீட்க்கப்ட்ட இப் பாலத்தில் கடந்த சில வாரங்களாக திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

அஸ்கிரிய பீடம் கண்டனம்! வட,கிழக்கில் இடம்பெறும் காடழிப்பை ஜனாதிபதி தடுக்க வேண்டும்

wpengine