இதுவரை காலமும் திரைமறைவில் இருந்து வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இடையிலான அதிகார போட்டி பகிரங்கமாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
“ நானே ஜனாதிபதி என்பதை பிரதமர் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் முப்படையினர், பொலிஸ் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அமைச்சர்கள் டளஸ் அழகபெரும, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்லைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் கந்தகாடு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாக இதன் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அப்போது ஏன் இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு சென்றீர்கள் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தன்னை தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்கள் அனுப்பப்படுவதை இடைநிறுத்துமாறு கூறியதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அப்போது“ பிரதமர் தானே ஜனாதிபதி என இன்னும் எண்ணிக்கொண்டு அப்படி கூறியிருக்கலாம். நானே தற்போது ஜனாதிபதி. மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்குமாறு நானே கூறினேன். எனது உத்தரவை எவராலும் மாற்ற முடியாது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு கூறியதை அடுத்து அங்கிருந்தவர்களின் முகாம் மாறி போனதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.