பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் அணிதிரண்ட வவுனியா மக்கள்.

ஊடகப்பிரிவு-

ஆறுமாத சிறைவாழ்க்கை ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டியிருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை. சிறை மீண்ட செம்மலாக, இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டத்துக்குச் சென்றுள்ள, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை அங்குள்ள மக்கள் ஆரத்தழுவி, ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

இன்று மாலை (29) வவுனியா, சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த தலைவர் ரிஷாட், மக்களுடன் அளவளாவினார்.

கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள், தாய்மார்கள், சிறுவர்கள், சமூகநல விரும்பிகள், சமூகப்பற்றாளர்கள் என பல்வேறு மட்டத்தினரும், தங்களது தலைமையைக் காண அங்கு ஆவலுடன் குழுமியிருந்தனர்.

அங்கு வருகை தந்திருந்தவர்கள், தலைவரின் சுகநலன்களை விசாரித்ததுடன், அவரை ஆரத்தழுவி முஸாபஹா செய்தனர். அங்கு வந்திருந்த தாய்மார்கள் கூட, தமது தலைமை மீதான பற்றை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில், மக்களுடன் அளவளாவிய தலைவர் ரிஷாட் பதியுதீன், தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

Related posts

ஜனாஸா எரிப்பு விடயத்தில், அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருக்கின்றது.

wpengine

பாலியல் சட்ட திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட ரணில்

wpengine

தாருஸ்­ஸலாம் சொத்து விபரங்களை இன்னும் வெளியீடாத ஹக்கீம் – பஷீர் சேகு­தாவூத்

wpengine