Breaking
Sun. May 5th, 2024

கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக்கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது.


வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கியதன் மூலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சமூக வலைத்தளமான பேஸ்புக் சமீபத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளானது.

அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க ஒரு நேபாள சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ஓடிவரும் காட்சி பதிவாகி இருந்தது.

குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாத பேஸ்புக் நிறுவனம், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நோர்வே செய்தித்தாள் நிறுவனமான ஆப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்தது.

பல வாரங்களுக்கு முன், நோர்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவும் நீக்கப்பட்டது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தற்போது இந்த புகைப்படத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உள்ளது. வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம்குண்டினால் காயமடைந்த சிறுமி பான் தி கிம் ஃப்யூக் , தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள்.

உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடிவந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது. போரின் வீரியத்தை உணர்த்தும் இந்தச் சிறுமி ஓடிவந்த காட்சியை படம்பிடித்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1997-ல் ‘Kim Phuc Foundation’  என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து ‘Kim Phuc Foundation International’ என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *