தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 2500 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் போலியான புகைப்படங்களை பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷன் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

அறிமுகம் இல்லாதவர்களை பேஸ்புக் கணக்குகளில் நண்பர்களாக இணைத்துக்கொள்வதன் காரணமாகவே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலரின் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை !

Editor

21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா

wpengine