பிரதான செய்திகள்

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை சுட முயற்சித்த சார்ஜன்ட்!

மாலபேயில் போக்குவரத்து பிாிவு பொலிஸ் பொறுப்பதிகாாியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஏனைய பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக தொிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

சம்பந்தப்பட்ட சார்ஜன்டை பணி இடைநிறுத்தம் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

அக்காவின் காதலனால் சீரழிந்த தங்கையின் வாழ்க்கை.

Maash

ரணில்,மைத்திரி இரு முனைப்போட்டி

wpengine

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor