பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராவே களமிறங்குவார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இறுதிக்கு முன் ஜனாதிபதி தேர்தல் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபியை காட்டிலும் கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

எனவே எதிர்வரும் தேர்தல்களிலும் இது சாத்தியமாகும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பொதுஜன பெரமுனவை பொறுத்தவரையில் ரணில், சஜித் மற்றும் நவின் முக்கியமல்ல. சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுக்கு எதிராகவே செயற்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இது முழு முஸ்லிம் மக்களின் போராட்டம்! மறிச்சுக்கட்டியில் அமீர் அலி (விடியோ)

wpengine

விமலின் பேச்சாளர்! முஸம்மில் கைது

wpengine

”என்னைப்பழிவாங்க துடியாய் துடிக்கிறது ஒரு சிறு கூட்டம், நேத்ரா தொலைக்காட்சியில் அமைச்சர் ரிஷாட்”

wpengine