Breaking
Fri. May 3rd, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு பதில் அளித்த அமைச்சர் ஹக்கீம் பொத்துவில் அமைப்பாளர் சற்று சுறு சுறுப்பு குறைவாக இருந்ததாலேயே பொத்துவிலிற்கு தனது நிதியை ஒதுக்க முடியாமல் போனதேன பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி இருந்தார்.மு.காவின் வளர்ச்சிப் படியில் பொத்துவிலின் பங்களிப்பு அபரிதமானது.அமைச்சர் ஹக்கீம் ஒரு அமைச்சராக இருக்கின்றாறென்றால் அதற்கு பொத்துவில் மக்களின் ஆதரவும் ஒரு காரணம்.பொத்துவில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதால் அமைச்சர் ஹக்கீம் தனது நிதியில் பொத்துவில் போன்ற பிரதேசங்களை கவனத்திற் கொள்வது அவரது தலையாய கடமையாகும்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்கு அவ் ஊர் அமைப்பாளரின் சுறு சுருப்பின்மை தடையாக இருக்குமாக இருந்தால் அவரை நீக்கி வேறு ஒரு சுறு சுறுப்பானவரை  நியமித்து அவ் ஊரை அபிவிருத்தி செய்வதே ஏற்றுக்கொள்ளத் தக்க விடயம்.அவ்வாறில்லாமல் அவரையே வைத்துக் கொண்டு சுறு சுறுப்பில்லாமல் இருப்பதால் தான் என்னால் நிதியை ஒதுக்க முடியாமல் போனதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.அமைச்சர் ஹக்கீம் கூறும் கதை வேலை காரிக்கு பிள்ளைச் சாட்டு போன்றுள்ளது.2016-12-08ம் திகதியுடன் பொத்துவில் மு.கா அமைப்பாளராகவிருந்த கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதின் அமைப்பாளர் பதவி நிறைவடைந்துவிட்டது.தற்போது பொத்துவிலிற்கு மு.கா அமைப்பாளர்கள் யாருமில்லை.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீம் மு.கா அமைப்பாளராக குற்றம் சுமத்தியவர் யார்?

 

இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம்  குறித்த நிகழ்ச்சியில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதை கூறியதாகவே பலரும் கருதுகின்றனர்.அவர் சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அவர் பதவி வகித்த காலப்பகுதியில் பொத்துவிலில் வைக்கப்பட்ட சிலையை அகற்றுவதில் அரும்பாடு பட்டிருந்ததோடு அதில் வெற்றியும் கண்டார்.இன்று இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை மு.காவினர் அகற்ற முடியாமல் தவிப்பது அவரது ஆற்றலை நிறுவிச் செல்கிறது.அது மாத்திரமல்ல பொத்துவிலின் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய போது தனது சொந்தப் பணத்தில் ஆசிரியர்களை நியமித்து பல மாதங்கள்  பாடம் போதிக்கச் செய்தவர்.பொத்துவில் சந்தைக் கட்டடத்திற்கு ஆறு கோடி ரூபாய்களை அமைச்சர் ஹக்கீமிடமிருந்து ஒதுக்கச் செய்தவர்.இதற்கான வரைவுகளையும் தனது சொந்தப்பணத்தில் செலவு மேட்கொண்டிருந்தார் (சரியான முன் மொழிவில்லாததல் இதனை அவரால் செய்ய முடியாமல்  போய் இருந்தது).இப்படியான ஒருவரை அமைச்சர் ஹக்கீம் உற்சாகம் குறைந்தவராக  குறை  கூறியதன் காரணமென்ன?

 

இன்னும் ஒரு சில மாதங்களில் (அனேகமாக எதிர்வரும் மார்ச் மாதம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் பொத்துவிலின் பிரதான கதாநாயகனாக அப்துல் வாசித் அவர்களே முன்னாள் தவிசாளர் என்ற வகையில் இருப்பார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அவரை சமூக சேவையில் உற்சாகம் குறைந்தவராக பகிரங்க நிகழ்வில் குறிப்பிடுவது அவரது அரசியல் வாழ்வை உருக்குலைத்து விடும்.அப்துல் வாசித்  அமைச்சர் ஹக்கீம் கூறிய பிரகாரம் இருந்தாலும் அதனை அமைச்சர் ஹக்கீம் அவரிடம் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம்.அதனை சுட்டிக் காட்ட ஒரு பகிரங்க நிகழ்வு பொருத்தமான இடமுமல்ல.இது அவர் கதாநாயகனாக மாறக் கூடிய தேர்தல் நெருங்கிய காலம் என்பதால் பொருத்தமான நேரமுமல்ல.இதனை அரசியலை கரைத்து குடித்த அமைச்சர் ஹக்கீம் அறியாதவருமல்ல.இது தொடர்பில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதின் மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.ஒரு குழுவினர் அப்துல் வாசிதை அரசியலில் இருந்து தூரமாக்க பகிரங்க முயற்சி செய்து வருகிறது.இக் குழுவிற்கு அமைச்சர் ஹக்கீம் பச்சை சைகையை குறித்த நிகழ்வினூடாக காட்டியுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அப்துல் வாசிதிற்கு ஆப்பா?

அமைச்சர் ஹக்கீமிடம்  ஒரு வேலை ஆக வேண்டுமாக இருந்தால் அவருக்கு பின்னால் நின்று ஒவ்வொரு படியையும் செய்விக்க வேண்டும்.ஒரு நாள் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மறு நாள் வந்து அவரை சந்தித்து அந்த வேலையை முடிக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீமே அந் நிகழ்வில் குறிப்பிடுகிறார்.ஒரு ஊரில் அரசியல் வாதிகள் செய்து கொடுக்க வேண்டிய ஆயிரம் தேவைகள் இருக்கும்.அவை அனைத்தையும் அமைச்சர் ஹக்கீமின் பின்னால் அலைந்து தான் சாதிக்க வேண்டுமாக இருந்தால் குறித்த அலையும் நபருக்கு  அது தான் தொழிலாக இருக்க வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் தன்னிடம் வந்து சாதித்ததாக குறிப்பிட்ட தௌபீக்,ரிஸ்வி ஜவஹர்சா ஆகியோர் அரசியல் அதிகாரங்களை தங்களிடம் வைத்திருப்பவர்கள்.அவர்களுக்கு அதனூடாக பல படிகளை இலகுவாக செய்து கொள்ளவும் முடியும்.

அப்படியான நிலையில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதில்லை. கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் பாசிதை பொறுத்தமட்டில் அவர் கொழும்பு சென்று அங்கு பல நாட்கள் தங்கி அமைச்சர் ஹக்கீமை நினைத்த இடத்தில் சென்று சந்தித்து வர அவருக்கு கொழும்பில் தங்குமிட வசதியோ வாகன வசதியோ அவரிடமில்லை.சில படிகளை இலகுவாக செய்து கொடுக்க அரசியல் அதிகாரப்பலமுமில்லை.இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது.ஒவ்வொரு ஊரிற்கும் அரசியல் அதிகாரப்பலம்  இருக்க வேண்டுமென்ற பிழையான பிரதேச வாதம் இவ்விடத்தில் அமைச்சர் ஹக்கீமின் கூற்றால் நியாயப்படுத்தப்படுகிறது.

இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம்  குறித்த நிகழ்ச்சியில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதை கூறியதாகவே பலரும் கருதுகின்றனர்.அவர் சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அவர் பதவி வகித்த காலப்பகுதியில் பொத்துவிலில் வைக்கப்பட்ட சிலையை அகற்றுவதில் அரும்பாடு பட்டிருந்ததோடு அதில் வெற்றியும் கண்டார்.இன்று இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை மு.காவினர் அகற்ற முடியாமல் தவிப்பது அவரது ஆற்றலை நிறுவிச் செல்கிறது.அது மாத்திரமல்ல பொத்துவிலின் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய போது தனது சொந்தப் பணத்தில் ஆசிரியர்களை நியமித்து பல மாதங்கள்  பாடம் போதிக்கச் செய்தவர்.பொத்துவில் சந்தைக் கட்டடத்திற்கு ஆறு கோடி ரூபாய்களை அமைச்சர் ஹக்கீமிடமிருந்து ஒதுக்கச் செய்தவர்.இதற்கான வரைவுகளையும் தனது சொந்தப்பணத்தில் செலவு மேட்கொண்டிருந்தார் (சரியான முன் மொழிவில்லாததல் இதனை அவரால் செய்ய முடியாமல்  போய் இருந்தது).இப்படியான ஒருவரை அமைச்சர் ஹக்கீம் உற்சாகம் குறைந்தவராக  குறை  கூறியதன் காரணமென்ன?

இன்று மு.காவை ஆதரிக்கக் கூடிய மக்கள் கிழக்கு மாகாணத்திலேயே அதிகம் உள்ளனர்.அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய அமைச்சர் ஹக்கீம் என்ற ஒரு நபரை தேடி பலர் கொழும்பு,கண்டி செல்ல வேண்டுமென்றதை விட அமைச்சர் ஹக்கீம் கிழக்கு வந்து அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வது தான் மிகவும் பொருத்தமானது.அதனை விட கிழக்கை சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருந்தால் அது இன்னும் சிறப்பானது. நான் கிழக்கு வாதத்திற்கு எதிரானவன்.குறித்த நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் கூறிய கூற்றின் பிரகாரம் கிழக்கு வாதமும் நியாயமாகிறது.

இல்லை இல்லை எங்கள் தலைவர் சொன்னது சரியென அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்குவார்களாக இருந்தால் அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு சில மாதங்களில் (அனேகமாக எதிர்வரும் மார்ச் மாதம்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் பொத்துவிலின் பிரதான கதாநாயகனாக அப்துல் வாசித் அவர்களே முன்னாள் தவிசாளர் என்ற வகையில் இருப்பார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் அவரை சமூக சேவையில் உற்சாகம் குறைந்தவராக பகிரங்க நிகழ்வில் குறிப்பிடுவது அவரது அரசியல் வாழ்வை உருக்குலைத்து விடும்.அப்துல் வாசித்  அமைச்சர் ஹக்கீம் கூறிய பிரகாரம் இருந்தாலும் அதனை அமைச்சர் ஹக்கீம் அவரிடம் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம்.அதனை சுட்டிக் காட்ட ஒரு பகிரங்க நிகழ்வு பொருத்தமான இடமுமல்ல.இது அவர் கதாநாயகனாக மாறக் கூடிய தேர்தல் நெருங்கிய காலம் என்பதால் பொருத்தமான நேரமுமல்ல.இதனை அரசியலை கரைத்து குடித்த அமைச்சர் ஹக்கீம் அறியாதவருமல்ல.இது தொடர்பில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாசிதின் மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.ஒரு குழுவினர்

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *