Breaking
Tue. Nov 26th, 2024

(ரூஸி சனூன் புத்தளம்)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புத்தளம் நகர சபைக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதை காணமுடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தமது கூட்டு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்திவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய இதர கட்சிகளுடன் சேர்ந்து பொதுஜன ஐக்கிய முன்னணி புத்தளம் நகர சபைக்கு வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் வேட்பாளர்களை சேர்க்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.

புத்தளத்தில் அண்மையில் இது தொடர்பிலான கூட்டமொன்று புத்தளம் நெடுங்குள வீதியில் அமைந்துள்ள கட்சியின் முக்கியஸ்தர் வீடொன்றில் இடம் பெற்றுள்ளது.

அதே வேளை புத்தளம் நகர சபைக்கு பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் ஒன்பதாம் வட்டார வேட்பாளராக களம் இறங்க சிரேஷ்ட ஊடகவியலாளர், சமாதான நீதவான்,தேசமான்ய இர்ஷாத் றஹ்மதுல்லாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இர்ஷாத் றஹஹ்மத்துல்லா ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார். தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்த முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபையின் வேட்பாளருமாவார்.

அதே வேளை புத்தளம் மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியாலளர் ஒன்றியத்தின் பிரதி தலைவராகவும் செயற்பட்டு வருவதுடன், பல சர்வதேச ஊடகங்களின் செய்தியாளராகவும் பணியாற்றிவருகின்றார்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் பழைய மாணவரான இர்ஷாத் றஹ்மத்துல்லா, சிறந்த ஒளிபரப்பாளராகவும், சூரியன் வானொளியின் நேரலை வர்ணனையாளராகவும், செய்தியாளராகவும் பணிபுரிகின்றார்.

மக்கள் பிரச்சினை தீர்ப்பதில் இர்ஷாத் றஹ்மத்துல்லா எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னின்று செற்பட்டுவரும் ஒரு சமூக சேவையாளர் என்பதுடன், அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஊடகச் செயலாளராக பணியாற்றியுள்ளதுடன் தற்போது இணைப்பு செயலாளராக கடமை புரிகின்றார்.

புத்தளத்தில் பிரபலமிக்க கல்வி மற்றும் அரசியல் துறைகளில் தம்மை ஈடுபடுத்திவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும், ஜனாதிபதியினால் சிரேஷட பிரஜை என்ற பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவருமான றஹ்மத்துல்லா மரைக்கார், உம்மு சுலைஹாவின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *