தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் பணம் கறக்கும் குழு

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் பணம் கறக்கும் மோசடி செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவதாக சுங்கத்திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் நட்பையேற்படுத்தும் சிலர் தங்களை வெளிநாடுகளில் வசிப்பவர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடல்கள் மூலம் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்கின்றனர்.

பின்னர் குறித்த பெண்களுக்கு தாங்கள் பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும் அதற்காக சுங்கக் கட்டணம் மட்டும் செலுத்துமாறும் அவர்கள் பெண்களை நம்ப வைத்து பணத்தை மோசடி செய்து விடுகின்றனர்.

இவ்வாறான மோசடிகளில் அண்மைக்காலமாக சாதாரண பெண்கள் மாத்திரமன்றி மருத்துவர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உயர்கல்வி கற்ற பெண்கள் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறான மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிவிடாமல் அவதானமாக நடந்து கொள்ளுமாறு சுங்கத் திணைக்களம் பெண்களுக்கு விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

Related posts

மாகாண சபையின் தீர்மானம் தாண்டிக்குளம்! முதலமைச்சரின் தீர்மானம் ஒமந்தை ! மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்

wpengine

அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மௌனம்!

wpengine