தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்,வட்அப்,வைபர் சமூகவலை தளத்திற்கு எதிராக தண்டனை

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக அவசர கால சட்டம் பிரயோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலி பிரச்சார மற்றும் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் மற்றும் மெசென்ஜர்களில் போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இனவாதம் அல்லது போலி பிரச்சாரங்களை வெளியிட்டமை உறுதி செய்யப்பட்டால் அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற இன மோதல் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பாதுகாப்பு அமைச்சின் மீளாய்வு கூட்டம்

wpengine

விக்னேஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்

wpengine

தாஜூடின் கொலை குறித்த சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது!

wpengine