Breaking
Fri. May 17th, 2024

மதுபோதையில் மாட்டிறைச்சி உட்கொள்ள கேட்கும் பௌத்தர்களை என்ன செய்யலாம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்கியை எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் இனவாத முரண்பாடுகள் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான மோதல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திகன சம்பவத்தில் உயிரிழந்த குமாரசிங்கவின் குடும்பத்திற்கும், அப்துல் பாஸித்தின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
இனவாத முரண்பாடுகளை முறியடிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தேசிய சமாதானத்தை தோற்கடித்து இனவாத கோத்திரவாத கொள்கைகள் தலைதூக்கக் தொடங்கியுள்ளன. சிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன.
இன முரண்பாடுகள் எந்தவொரு இன சமூகத்திற்கும் நன்மையை ஏற்படுத்தப் போவதில்லை.
அதிகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், அதிகாரத்தில் இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வரவும் இவ்வாறு இன பேதங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்த ஓர் இராச்சியமாக மாற்றமடைந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கம் பிரதமர் பதவி குறித்தும் சில அமைச்சுப் பதவிகள் குறித்துமே கவனம் செலுத்தி வந்தது.

மதுபானம் அருந்தி மாட்டிச்சிறைச்சி கொத்து ரொட்டி வழங்குமாறு கோரி நிற்கும் பௌத்தர்களை அழிக்கத்தான் வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்திற்கு நன்மையளிக்கும், மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முடியும்.

அரசாங்கம் மட்டுமன்றி, தோல்வியடைந்த தரப்புக்களும் இனவாத அப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *