உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் திருமண பெண்!

திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என இளைஞர் பேஸ்புக்கில் எழுதிய பதிவு வைரலான நிலையில் அவருக்கு பெண் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்ஜீஷ் மஞ்சேரி (34). இவருக்கு பல வருடங்களாக திருமணத்துக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில் பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த யூலை மாதம் பேஸ்புக்கில் ரஞ்ஜீஷ் ஒரு பதிவை எழுதினார். அதில், எனக்கு இன்னும் திருமணம் நிச்சயிக்கபடவில்லை.
திருமணத்துக்கு பெண் தேடி வரும் நிலையில், உங்களுக்கு பெண் யாராவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

என் வயது 34. எனக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை. பெண்ணை எனக்கு பிடிக்க வேண்டும், நான் புகைப்படகலைஞராக உள்ளேன் என பதிவிட்டிருந்தார்.

பதிவில், பெற்றோருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ரஞ்ஜீஷ் வெளியிட்டார்
இந்த பதிவை 4100 பேர் பகிர்ந்த நிலையில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு பதிவை ரஞ்ஜீஷ் பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அதில், எனக்கு பெண் கிடைத்துவிட்டது. அது குறித்த மற்ற விபரங்களை நேரம் வரும் போது அனைவரிடமும் தெரிவிப்பேன்.
எனக்கு உதவிய அனைவருக்கும் மற்றும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருவதோடு, ரஞ்ஜீஷ் திருமணத்துக்கு செல்ல ஆர்வத்தோடு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லீம் காங்கிரஸை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொறுப்பேற்றதன் பின்னர் முஸ்லீம் மக்களிற்கு செய்தது என்ன?

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

wpengine

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine