Breaking
Wed. May 22nd, 2024

குருநாகல் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிம் 56ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்.

அவரின் தற்போதைய செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளது, பெரும்பான்மை இன சகோதரர்களின் மனதை வென்ற ஒரு நபரே அவர், இன்ஷா அல்லாஹ் அடுத்த தேர்தலில் பாராளுமன்றம் நுழைவார்…..

ஆம் அவர்தான் டொக்டர் ஷாபி சஹாப்தீன்.. (நேற்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக இருந்தது.)

இனவாதிகளின் இலக்காக இருந்த ஒரு விடையம்தான் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியை இல்லாது ஒழிப்பதே..

அதற்கு உருவாக்கப்பட்ட நாடகமே நேற்று அரங்கேரியது, சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என்ற போலி குற்றச்சாட்ல் நேற்று சந்தேகத்தின் பேரில் கைதாகியிருக்கிறார்.

இத்தனை நாளாக வெளிவராத செய்தி முஸ்லிம்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் வெளிவந்ததன் நோக்கம்தான் என்ன.?

நேற்று மருத்துவர் ஷாபி உடன் குருநாகல் வைத்தியசாலையில் கடமைபுரியும் ஒரு சிங்கள மருதுவரின் முகநூல் பதிவை காணகிடைத்தது அதில் அவர் தெட்டத்தெளிவாக குறிப்பிடு இருக்கிறார். தான் பல மாதங்களாக மருத்துவர் ஷாபியுடன் பணிபுரிவதாகவும், இவ்வாறான கருத்தடைகள் இடம்பெறவில்லை என்றும்.

கருத்தடை விடையத்தில் இருந்து நிரபராதி என ஷாபி தப்பி விடுவார் என்பதற்காக அவர் மீது இன்னுமொரு குற்ற சாட்டும் முன் வைக்கப்படுகிறது, அதாவது ‘சொத்து சேர்ப்பு’ குறுகிய காலத்துக்குள் பல சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்ற குற்றச்சாட்டு!!

இனவாத பிடியில் இருந்து எம் சமூகத்தார்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஷாபி என்ற தனி வைத்தியருக்கான போர் அல்ல இது எம் சமூகம் சிந்திக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக எம்மை சிதைக்கப் பார்தார்கள் முடியவில்லை.. கடைகளை உடைக்க உடைக்க நாம் பல கடைகளை கட்டி வாழ்ந்து காட்டியுள்ளோம்,

பொருளாதாரத்தில் தோற்றுப்போனவர்கள் அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கிறார்கள். அந்த இனவாத பிடியில் அமைச்சர் ரிசாட் சிக்கி தவிக்கிறார்.
இது அமைச்சர் ரிசாட்டிற்கான பிரச்சனை அல்ல, ரிசாட்டிடம் பிரச்சனை இருந்தால் இந்நேரம் அவர் சிறையில் இருந்திருப்பார், திவிரவாதிகளை பிடித்து கூண்டில் அடைத்துக் கொண்டிருக்கும் எம் நாட்டு CID க்கு ரிசாட்டை பிடிப்பது பெரிய வேலையா? பொய் குற்றசாட்டை Cid ஏற்பார்களா??
ஒரு சிலர் எம்மவர்கள் அரசியலுக்காக ரிசாட்டை விமர்சித்து வருகிறார்கள். அவர் மேல் குற்றம் இருப்பின் காவல்துறை தண்டனை வழங்கும் அதற்கு மேலாக அல்லாஹ்வின் தன்டனை கோடியது.. எனது அன்பான வேண்டுகோள் அரசியலுக்காக வீணான விமர்சனங்களை செய்யாதீர்கள்..

அடுத்த இலக்கு கல்வி, மருத்துவத்திலிருந்து நேற்று இனவாதம் தொடங்கியிருக்கிறது.

யா அல்லாஹ் எம் சமூகத்தார்களை பாதுகாப்பாயாக!

இர்பான் ரிஸ்வான்
26/05/2019

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *