தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் இறந்துபோன நிறுவனர் மார்க் சக்கபேர்கின்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், உயிரோடு இருக்கும் பயனாளர்களை இறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்துபோன பயனாளர்களின் நினைவுகளை பகிர்ந்து மரியாதையை செலுத்துங்கள் என அவர்களது சக நண்பர்களுக்கு பேஸ்புக்கிலிருந்து தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இறப்புப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்கின் பெயரும் இருந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.

இலட்சக்கணக்கான பயனாளர்களுக்கு இந்த தகவல் அனுப்பப்ப‌ட்டதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நண்பர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தனர்.

மேலும், டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் பேஸ்புக் நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனங்கள் பகிரப்பட்டுள்ளது.

இந்த தவறு குறித்து மன்னிப்பு கோரியுள்ள பேஸ்புக் நிறுவனம், உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாக அறிவித்தது மிகவும் மோசமான தவறு என ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த பிரச்னை உடனடியாக தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Related posts

அக்கரைப்பற்று மக்களின் பிரச்சினைக்கு ஹக்கீம் அமைச்சர் தீர்வு கொடுப்பாரா?

wpengine

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

wpengine

மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

wpengine