தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் இனி 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றவும் பார்க்கவும் முடியும்.

சமூக வலைத்தளமான பேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ட் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து இனி பேஸ்புக்கில் பதிவேற்றலாம்.

பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணனித் திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்ட்போனுக்கு ஏற்றவாறு அது மாற்றப்படும்.

பதிவேற்றப்பட்டுள்ள படத்தின் கீழ் வலது மூலையில் சிறிய திசைகாட்டி போன்ற ஐகான் தோன்றினால் அது 360 டிகிரி புகைப்படம் என அறியலாம்.

மவுஸை க்ளிக் செய்து அந்த படத்தில் மேல், கீழ், வலது, இடது என அசைக்கும்போது அந்த புகைப்படத்தின் முழு வடிவமும் தெரியவரும்.

மார்க் ஸக்கர்பெர்க் பதிவேற்றிய 360 டிகிரி புகைப்படம் இது.

Related posts

எகிப்தின் முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

விண்ணப்பம் கோரவுள்ளது! ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டி

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக மன்னாரில் சாத்விகப் போராட்டம்

wpengine