Breaking
Sat. Apr 27th, 2024

(பொத்துவில் யாசீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் பாலமுனை மாநாட்டில் பங்கேற்க முடியுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்ச ரவூப் ஹக்கீம் விடுத்த அழைப்பு ஒரு பம்மாத்தானது. முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையை தாம் விரும்புவதாக அந்தச் சமூகத்திடம் பாசாங்கு காட்டுவதற்காக ஹக்கீம் விடுத்த அழைப்பாகவே இதனைக் கருத முடியும்.

அதாவுல்லாவும், ரிஷாட்டும் பொறுப்புவாய்ந்த கட்சிகளின் தலைவர்கள். எனவே அவர்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டு ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார்.

கிழக்கிலே ஒரு குட்டி அரசனாக கணிக்கப்படும் அதாவுல்லா வடக்கிலே ஒரே ஒரு கெபினட் அமைச்சராக இருந்து கொண்டு தனிக்கட்சியொன்றைத் தொடங்கி மக்கள் பணி செய்யும் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வீதிகளில் அலைந்து திரிபவர் அல்ல. ஹக்கீமைப் போல் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியை தட்டிப் பறித்தவர்களும் அல்ல. மாறாக அவர்கள் சொந்தக் காலில் நின்று கட்சியமைத்து மக்கள் பணி செய்தவர்கள். ஹக்கீமிடம் இதயசுத்தியான அழைப்பு இல்லையென்பதை சில சம்பவங்கள் மூலம் எடுத்துக் காட்டலாம்.

உதாரணமாக மடவளையில் முன்னணி பாடசாலையொன்றின் நிகழ்வொன்றுக்கு அமைச்சர் ஹலீம் பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார். அந்த விழாவில் கௌரவ அதிதிகளாக ஹக்கீமும், ரிஷாட்டும் அழைக்கப்பட்ட போது பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட ஹக்கீம் ரிஷாட்டை அழைத்தால் தான் வரப்போவதில்லை என  அடம்பிடிக்கிறார்.

அதே போன்று கண்டி அக்குரணை பாடசாலை ஒன்றின் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் அழைக்கப்படுகிறார். அந்த விழாவுக்கு கௌரவ அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் சல்மான் அழைக்கப்படுகின்றார். இதைக் கேள்வியுற்ற ஹக்கீம் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ரிஷாட்டை அழைத்தால் சல்மான் வரமாட்டார் என்று எச்சரிக்கைப் பாணியில் கதைத்துள்ளார். இது தான் முஸ்லிம் சமூகக் கட்சித்தலைவரின் ஒற்றுமைக்கான செயற்பாடுகள்.

நாளை 19 ஆம் திகதி அக்கறைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் திறக்கப்படவுள்ள நீச்சல் தடாகம் அமைச்சர் அதாவுல்லாவின் முயற்சியினால் கட்டப்பட்ட ஒன்று. ஆனால் நாட்டுத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் அழைப்பிதழில் அந்தப் பிள்ளையைப் பெற்ற அதாவுல்லாவின் பெயர் இடம்பெறவில்லை. யாரோ பிள்ளையைப் பெற ஹக்கீமும் தவமும் இணைந்து பெயர் வைக்கப் போகின்றனர். இது தான் முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகள்.

இவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கும் புரியாத ஒன்றல்ல!!!

முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென ஹக்கீம் வெளியுலகத்திற்கு கூறி வருவது பச்சப்பொய். அமைச்சும் பதவிகளுக்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பலர் சென்றார்கள் என்றும் அவர்கள் உள்ளே வந்தால் அமைச்சுப் பதவிகள் தொடர்பில் சில கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஒலுவில் ஊடகவியலாளர் மாநாட்டில் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதே ஹக்கீம் தான் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் கொழும்பு தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் “முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இனி அமைச்சுப்பதவியை பொறுப்பேற்காது” என பகிரங்கமாகக் கூறியவர்.

ஹக்கீம் தனது 15 வருட கால அரசியல் வரலாற்றில் சொல்வது வேறு, செய்வது வேறு, இதை அவர் தனது அரசியல் சாணக்கியமென நினைத்துக்கொள்கிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *