பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை

பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கடந்த 21ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு நேற்றுமுன்தினம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த விடயத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
பெஹலியகொட மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேருக்கு கடந்த வியாழக்கிழமை பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பீ.சி.ஆர். பரிசோதனையின் மாதிரிகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.

Related posts

Invitation – Photo Exhibition – 29-31 March 2022 – Palestine Land Day

wpengine

கூட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்

wpengine

தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவுசெலவு திட்டம் இன்று .

Maash