பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பூரணத்துவமான வதிவிட மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மன்னார் நகரில்

இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை வலுப்படுத்தும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட” பயனாளிகளுக்கான திட்டம் வழங்கல்” ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (19.08.2021) மன்னார் நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு M.பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


திட்டம் தொடர்பான விளக்கவுரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு I.அலியார் அவர்களினால் அளிக்கப்பட்டது.


பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தலைமை முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வாழ்வாதார பயனாளிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


அத்தோடு மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார் தெற்கு சமுர்த்தி வங்கியிலும் இந்நிகழ்வு மன்னார் தெற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Related posts

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

wpengine

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது-ரணில்

wpengine

காதல் கல்யாணம் பிரிவுக்கு சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்

wpengine