பிரதான செய்திகள்

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வவுனியா நகரசபை உறுப்பினர் முற்பட்ட நிலையில் சட்டத்தினை காரணம் காட்டி தவிசாளர் அதனை மறுத்திருந்தார்.


வவுனியா நகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்று இடம் பெற்றது.


இதன்போது கூட்டமைப்பின் பெண் நகர சபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் திலீபனுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவதற்கு சபையின் தவிசாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.


எனினும் குறித்த நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளமையால் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் குறித்த உறுப்பினரிடம் தெரிவித்தார்.

Related posts

வடக்கு சிறுதொழில் முயற்சியாளர்கள் முன்னேறி, எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும்.

Maash

இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை!

wpengine

மதஸ்தலங்களில் அரசியல் பிரச்சாரம் செய்யமுடியாது

wpengine