பிரதான செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேரூந்து மற்றும் புகையிரத சேவைகள்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

அதன்படி, புத்தாண்டு காலத்திலும் மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் பண்டுக சவர்ணஹன்ச தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இன்றும் சில விசேட புகையிரத நேரங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மற்றும் காலை 6.30 மணிக்கும், பதுளையில் இருந்து கோட்டை வரை மாலை 5.20 மற்றும் காலை 7.00 மணிக்கும் புகையிரத நேரங்கள் இயக்கப்படும்.

Related posts

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலில் 9பேரின் பெயர் விபரம்

wpengine

பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

wpengine

மஹிந்த இம்ரான் இடையில் பேச்சு

wpengine