Breaking
Wed. May 8th, 2024

(M.N.M.பர்விஸ்)

பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டால் கூட அந்தப் பிரதேசத்திற்கு தேசியப்பட்டியலில் எம் பி பதவியொன்றை பெற்றுத்தருவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அன்று வழங்கிய வாக்குறுதியை செயலில் நிரூபித்துக் காட்டினாரென்று எம் எச் எம் நவவி எம் பி தெரிவித்தார்.

புத்தளாம் தாராவில்லுவில் இடம்பெற்ற காபட் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த விழாவில் நவவி எம்பி மேலும் கூறியதாவது,cb6e6f08-2cb8-472d-a02c-7dfa20226d0c

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நான் போட்டியிட்டு சில நூற்றுக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே போன்று முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட இன்னுமொரு முஸ்லிம் வேட்பாளரும் தோல்வி கண்டார்.

புத்தளம் தொகுதியைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையீனமும் அரசியல்வாதிகளுக்கிடையே இடம்பெறும் கழுத்தறுப்புக்களுமே தோல்விகளுக்கு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது. தேர்தல் காலத்திலே நவவியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று ரிஷாட் பதியுதீன் மேடைக்கு மேடை வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக தொடர்ந்தும் இருக்கக் கூடாதென்று தெரிவித்தார். சுமார் 25 வருட காலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் புத்தளாம் வாழ் முஸ்லிம்கள் புத்திசாதூரியமாகவும் தூரதிருஷ்டியுடனும் வாக்குகளை பிரயோகித்தால் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்றுக்கொள்ள முடியுமென்று அவர் சுட்டிக்காட்டினார்.

தனது கட்சி வேட்பாளர் தோற்றால் எம் பி ஒருவரை தேசியப்பட்டியலில் இருந்து தான் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். எனினும் ஒட்டகக் கட்சிக்காரர்கள் அதனை எள்ளிநகையாடினர். ஆனால அமைச்சர் ரிஷாட் சொன்னதை செய்து காட்டினார். அவரது தலைமையில் புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு என்னால் முடிந்தவரை உழைப்பேன் என்றும் நவவி தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *