பிரதான செய்திகள்

புதிய அமைச்சு விபரம் றிஷாட் கைத்தொழில், ஹக்கீம் கப்பல் துறை

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் இந்த நொடிவரை உலக அரசியல் பரப்பில் இலங்கை அரசியல் பேசுபொருளாகவே உள்ளது.

இலங்கையின் சமகால அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்களே இதற்குக் காரணம்.

இந்நிலையில், புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சுக்கள் தொடர்பான பல விபரங்கள் தற்போது கசிந்துள்ளன.

ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான அமைச்சர்களின் பெயர் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் மூலம் தெரியவருகின்றது.

அதன்படி,

1. ரணில் விக்ரமசிங்க – பிரதமர், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

2. காமினி ஜயவிக்ரம பெரேரா – வனவிலங்கு, சுற்றுலா, வயம்ப அபிவிருத்தி மற்றும் புத்த சாசன அமைச்சு

3. மலிக் சமரவிக்ரம – சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

4. திலக் மரபான – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

5. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சு

6. மங்கள சமரவீர – பெற்றோலிய வள அபிவிருத்தி, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு

7. அகில விராஜ் காரியவசம் – கல்வி, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

8. லக்ஷ்மன் கிரியெல்ல – பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு

9. வஜிர அபேவர்தன – பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு

10. ராஜித சேனாரத்ன – உடல்நலம், சுதேச மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து அமைச்சு

11. ரவூப் ஹக்கீம் – துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு

12. சம்பிக்க ரணவக்க – நகர அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சு

13. ரிஷாட் பதியுதீன் – வர்த்தக மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு

14. டி.எம். சுவாமிநாதன் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு

15. அர்ஜுன ரணதுங்க – விளையாட்டு அமைச்சு

16. ஜோன் அமரதுங்க – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சு

17. துமிந்த திஸாநாயக்க – வேளாண்மை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

18. கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு அமைச்சு

19. விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி, கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு

20. ஏ.எச்.எம். பௌசி – போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு

21.பியசேன கமகே – மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு

22. கயந்த கருணாதிலக – வெகுஜன ஊடக, நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

23. சரத் பொன்சேகா – தொழிலாளர் மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் அமைச்சு

24. தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வு அமைச்சு

Related posts

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Editor

மொட்டுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் 3நாள் மூடக்கம்- ராஜபஷ்ச

wpengine

கைது செய்யப்பட்ட 9 பேரில் 7முஸ்லிம், ஒரு தமிழர்,ஒரு சிங்களவர்

wpengine