பிரதான செய்திகள்

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

அமைச்சர் விமல் வீரவன்ச அமர்வதற்காக கொள்வனவு செய்த நாற்காலியின் விலை 6 இலட்சம் ரூபாய் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.


தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


நாட்டில் பணப்பிரச்சினை என ஒன்றும் இல்லை. புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம் செலவிடுகின்றனர்.

விமல் வீரவன்ச அமர்வதற்காக புதிதாக கொள்வனவு செய்யும் நாற்காலிக்காக 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
278 கோடி ரூபாய்க்கு கடந்த அரசாங்கத்தில் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. வாகனம் தொடர்பில் நோய் ஒன்றே உள்ளது.

கடந்த அரசாங்கத்தினர் பயன்படுத்திய வாகனங்களை இந்த அரசாங்க அமைச்சர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
தேவையற்ற செலவுகளே நாட்டில் பிரச்சனைகளுக்கு காரணமாகும். 6 இலட்சம் ரூபாய்க்கு விமல் நாற்காலி கொள்வனவு செய்யும் போது நாங்கள் 5 லட்சம் ரூபாய்க்கு பாலம் ஒன்றே நிர்மாணித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சமகால அரசாங்கத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, மக்களுக்கு நன்மை பயனக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

எனினும் விமல் வீரவன்ச தனது ஆடம்பரத்திறக்காக பெருமளவு பணம் செலவு செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் – பாராளுமன்றில் ரிஷாட் MP கோரிக்கை!

Editor

கொளுத்தும் வெயிலுக்கு 24 பேர் பலி: ஆந்திராவில் சோகம்

wpengine

ஐ போன் 6 வெடித்தால் ஏற்பட்ட விபரீதம்! நிங்களும் கவனம்

wpengine