Breaking
Thu. Nov 21st, 2024

பள்ளிவாசல்பிட்டி மன்/மருதோண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.றோகினி பீற்றர் தலைமையில் 29.09.2016 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் றிப்கான் பதியுதீன் மற்றும் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வடமாகாண மஜ்விஸ் சூரா தலைவர் மௌலவி S.H.M. அஸ்ரப் முபாரக் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் M.R.M.அல்ஹாஜ் ஹஜ்ஜிக் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு, அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர்.

அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன ஒற்றுமையை பேணினால் ஒழிய எம்மால் அபிவிருத்தியை எட்ட முடியாது எனவும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தாவிடில் எவ்வளவுதான் பௌதீக வளங்களை நாம் பெற்றுக்கொடுத்தலும் அதனால் எதுவித பயனும் இல்லை எனவும் ஆகவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததோடு மன்னார் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.unnamed-1 unnamed unnamed-4unnamed-3

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *