Breaking
Sun. May 19th, 2024

சுங்க பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம். சார்ள்ஸ் தான்தோன்றித்தனமாக பதவி நீக்கம் செய்யவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துறைமுகத்தினுள் செயற்படும் கடத்தல் கும்பல்களை முற்றாக ஒழிக்கும் நோக்கிலேயே சுங்க பணிப்பாளர் நாயகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்ட விடயத்தை எதிர்தரப்பினர் அரசியல்மயப்படுத்தி தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி விட்டனர்.

இவர்கள் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை ஒருபோதும் மறந்து விட கூடாது.

எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அவரது தரப்பினர், சுங்க பணிப்பாளர் நாயகத்தை நிதியமைச்சு நிறைவேற்று அதிகாரத்தை மீறி பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றர்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை முறையற்ற விதத்தில் பொய்யாள குற்றங்களை சுமத்தி தான்தான்றித்தனமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதித்துறை சுதந்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை எவரும் மறந்து விட முடியாது.

எவ்வாறாயினும், இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை நாங்கள் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் விவகாரத்தில் முன்னெடுக்கவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சுங்க பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம். சார்ள்ஸ் அண்மையில் திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதற்கும் சுங்க பணியாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் தொடர் பணிபுறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விடயம் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயத்தில் தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் சுங்க பணிப்பாளராக பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று நிமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *