பிரதான செய்திகள்

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று மாலை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வளாகத்தின் விடுதியில் முதலாம் வருட மாணாவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது தாக்கியதுடன் தமக்கு பாதுகாப்பு தருமாறு வளாகத்தின் முதல்வரிடம் இரவு 10.30 மணியளவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலையில் சிங்கள மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் தமிழ் மாணவர்களை அச்சுறுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமையினால் தமிழ் மாணவர்களும் வாளகத்தின் முதல்வரிடம் தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலையில் பரீட்சை ஆரம்பமாகிய இன்றைய தினம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை சமரசம் செய்வதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் ஏதுவாக வாளகத்தினை காலவரையறையின்றி மூட வளாகத்தின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இத்தகவலை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக வாளாகத்தின் அனைத்து பீடங்களிலும் குறித்த அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அம்பிகையின் அறப்போர் தொடர்கின்றபோதும் பிரித்தானியா மௌனமாக இருப்பதால் வேதனை சிவசக்தி ஆனந்தன்

wpengine

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

wpengine