ஜே.வி.பி. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
தமது கட்சி தொடர்பில் வார இறுதி சிங்கள செய்தித்தாளில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மையை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு கோரியே இந்த
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆணைக்குழுவிற்கு நேரடியாக சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். ஜே.வி.பி. கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மீது கட்சிக்குள் அதிர்ப்தி ஏற்பட்டிருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய செயற்குழுவின் உறுப்பினர் கே.டி. லால்காந்த அல்லது ரில்வின் சில்வாவிற்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குமாறு வலியுறுத்தும் ஒரு சாராருக்கும் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் மறுசாராருக்கும் இடையே பிளவு
ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜே.வி.பி. இனால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பத்திரிகை முறைப்பாட்டு
ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.