கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் திட்டத்திற்கு அமைவாக கிராம மட்ட சங்கங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்து விசேட திட்டத்தின் கீழ் மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலியாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலையை நேற்று 06-06-2016 திங்கள் மாலை 5.30 மணியளவில் திடீர் விஜயம் மேற்கொண்டு அமைச்சர் பார்வையிட்டதோடு அதற்கு பொறுப்பான மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினருடனும் கலந்துரையாடினார்.
அந்த வேளையிலே அவ் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்;
இத்திட்டத்தின் ஊடாக தாம் நாளாந்தம் குறைந்தது 300 ரூபாய் தொடக்கம் 600 வரையில் சாராரி வருமானம் பெறுவதாகவும், தம்முடைய புதிய நிர்வாகம் சிறப்பான முறையில் இயங்குவதாகவும் தெரிவித்தார்கள்.