பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது சில குழுக்கள் தாக்குதல்

வவுனியா – கற்பகபுரம் நான்காம் கட்டை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் நான்காம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.


அதனையடுத்து அந்த இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர்.


இதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.


அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்தி கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.


குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணொளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பு – கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி

wpengine

அரசின் நலன்புரி உதவித் திட்டத்தில் பாகுபாடு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக போராடிய பயனாளிகள்!

Editor