Breaking
Thu. Nov 21st, 2024

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து சத்தம் குறைவாக பாடல்களை இசைக்காத தனியார் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக சத்தமாக பேருந்துகளில் பாடல் இசைக்கப்படுவதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்போர் முகம் கொடுக்கும் சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1000 பாடல்கள் கொண்ட இசைத்தட்டு ஒன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயார் செய்துள்ளது.

இந்த இசைத்தட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இசைத்தட்டில் உள்ள பாடல்களை மாத்திரமே ஒலிபரப்பப்பட வேண்டும்.

சத்தமாக ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *