பிரதான செய்திகள்

பல்துறைசார் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் “மனித உரிமை விருது”

கல்வி, சுகாதாரம், கலை, ஊடகம் மற்றும் சமூக துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய சமூக சேவாயாளர்களுக்கு ‘மக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் அமைப்பின்’ ஏற்பாட்டில் “மனித உரிமை விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்; அத்துடன், கௌரவ விருந்தினராக, மேல் மாகாண சபை விவசாய, காணி, நீர் பாசன, சுகாதார அமைச்சர் காமினி திலகசிறி கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்னசிங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே, மாகாண சபை  உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே. மொஹமட் லாஹிர், ஆர்.எம்.அன்வர், ஹிதாயத் சத்தார், ரிப்கான் பதுயுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பல்துறை சார்ந்த 87 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

Editor

அமைச்சர் றிசாட் பதியுதீன் யுனெஸ்கோ பிரதிநிகளுடனான சந்திப்பு

wpengine

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

wpengine