Breaking
Sun. May 19th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை பத்திரிகையாளா் சங்கத்தின் 61வது ஆண்டு விழாவும் சிரேஸ்ட  ஊடகவியாளா்கள் 10பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனா, ஊடக தகவல்துறை அமைச்சா் ஹயந்த கருநாதிலக்கவும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் தமிழ் ஊடகவியலளாா்கள் தினகரன் ஆலோசகர் எம்.ஏ.எம் நிலாம், வீரகேசரி அண்லச்சுமி இராசதுறை  ஜனாதிபதியினால் பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கபட்டனா்.

இலஙகை வந்துள்ள இந்திய ஊடகவியாலாளா்கள் 2 5 பேரும் இணைந்து ஜனாதிபதியை இந்திய பாரிய முறையில் தொப்பி அணிவித்து மலா் மாலை அணிவித்து உச்ச கௌரவம் வழங்கி  கௌரவித்தனா்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி;

தற்பொழுது ஊடக சுதந்திரம் 2015 ஜனவரி 08ஆம் திகதியுடன்  இந்த நாட்டில் உள்ளது.   தற்பொழுது ஊடகங்களில் என்னை எப்படியெல்லாம் தாக்கி எழுதி  என் முதுகின் பின்னால்  குத்த  முடியுமோ அந்த அளவுக்கு தாக்கி எழுதுகின்றாா்கள்.   அந்த அளவுக்கு  ஊடகவியலாளாகளுக்கு  ஊடகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  இந்த ஊடகவியாலாளா்கள்  2015 ஜனவரி 08 முன்னா் நடைபெற்ற சம்பவங்கள்  எழுத முடியவில்லை.  அப்போது அவா்கள்  முதுகெழும்பு அற்றவா்களாக இருந்து வந்துள்ளனா். எனக் கேட்க விரும்புகின்றேன்.

SAMSUNG CSC

இரவில் படுத்து உறங்கி காலையில் எழுந்து சிறுவனோ வயோதிபரோ  பத்திரிகைகளை  வாசிப்பதற்கு எடுத்தால் அதில் இன முரன்பாடுகள், கொலை, களவு  சன்டை,  சச்சரவுகள்   ஆர்பாட்டம்,  அரசியல்வாதிகள் மற்றவரை தாக்கி பேசும் செய்திகளையே   நாம் வாசிக்க முடிகின்றது. . இதனை விட்டு இந்த நாட்டில் இன ஜக்கியம், இந்த நாடு எவ்வாறு முன்னோக்கி செல்ல வேண்டும். இந்த நாட்டில் வாழும் சகல இன  மக்களையெல்லாம் ஒரு நல்ல சிறந்த பிர ஜகளாக முன்னேற்றுவது எவ்வாறு ?  ஒரு மனிதனது உரிமை,  என பல பிரச்சினைகளை  ஊடகங்கள் மக்களுக்குச் சொல்வதில்லை.

SAMSUNG CSC

 புதிய ஆட்சியில் ஊடகச் சுதந்திரம் நடைமுறைப்படுத்தப்படும்.   ஒரு  சாதாரண  பொதுமகனும்  இந்த நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் ஓர அதிகாரியிடமோ  தமக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்ளும்  வகையில்   சில மாதங்களுக்குள்   ஊடக அமைச்சா் இங்கு குறிப்பிட்டவாறு உடன்  நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன்  இலங்கையில் ஊடகப் பணியில் உள்ளவா்களுக்கு ஊடக பயிற்சிக் கல்லுாாிகள்  அவா்களுக்கான  உரிய  கௌரவம் வழங்கப்படும். எனவும்  அங்கு ஜனாதிபதி உரையாற்றினாா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *