(அஷ்ரப் ஏ சமத்)
இலஙகை வந்துள்ள இந்திய ஊடகவியாலாளா்கள் 2 5 பேரும் இணைந்து ஜனாதிபதியை இந்திய பாரிய முறையில் தொப்பி அணிவித்து மலா் மாலை அணிவித்து உச்ச கௌரவம் வழங்கி கௌரவித்தனா்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி;
தற்பொழுது ஊடக சுதந்திரம் 2015 ஜனவரி 08ஆம் திகதியுடன் இந்த நாட்டில் உள்ளது. தற்பொழுது ஊடகங்களில் என்னை எப்படியெல்லாம் தாக்கி எழுதி என் முதுகின் பின்னால் குத்த முடியுமோ அந்த அளவுக்கு தாக்கி எழுதுகின்றாா்கள். அந்த அளவுக்கு ஊடகவியலாளாகளுக்கு ஊடகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊடகவியாலாளா்கள் 2015 ஜனவரி 08 முன்னா் நடைபெற்ற சம்பவங்கள் எழுத முடியவில்லை. அப்போது அவா்கள் முதுகெழும்பு அற்றவா்களாக இருந்து வந்துள்ளனா். எனக் கேட்க விரும்புகின்றேன்.
இரவில் படுத்து உறங்கி காலையில் எழுந்து சிறுவனோ வயோதிபரோ பத்திரிகைகளை வாசிப்பதற்கு எடுத்தால் அதில் இன முரன்பாடுகள், கொலை, களவு சன்டை, சச்சரவுகள் ஆர்பாட்டம், அரசியல்வாதிகள் மற்றவரை தாக்கி பேசும் செய்திகளையே நாம் வாசிக்க முடிகின்றது. . இதனை விட்டு இந்த நாட்டில் இன ஜக்கியம், இந்த நாடு எவ்வாறு முன்னோக்கி செல்ல வேண்டும். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களையெல்லாம் ஒரு நல்ல சிறந்த பிர ஜகளாக முன்னேற்றுவது எவ்வாறு ? ஒரு மனிதனது உரிமை, என பல பிரச்சினைகளை ஊடகங்கள் மக்களுக்குச் சொல்வதில்லை.
புதிய ஆட்சியில் ஊடகச் சுதந்திரம் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு சாதாரண பொதுமகனும் இந்த நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் ஓர அதிகாரியிடமோ தமக்குத் தேவையான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் சில மாதங்களுக்குள் ஊடக அமைச்சா் இங்கு குறிப்பிட்டவாறு உடன் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் இலங்கையில் ஊடகப் பணியில் உள்ளவா்களுக்கு ஊடக பயிற்சிக் கல்லுாாிகள் அவா்களுக்கான உரிய கௌரவம் வழங்கப்படும். எனவும் அங்கு ஜனாதிபதி உரையாற்றினாா்.