பிரதான செய்திகள்

பதவி விலக வேண்டுமாயின் தூதுவர்,தொகுதி பதவி வேண்டும் பூஜித

கடமையில் இருந்த கீழ் நிலை அதிகாரியை தாக்கியமை, சித்திரவதை மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலக நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸ்மா அதிபர் கீழ் நிலை அதிகாரியை தாக்கும் காணொளி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொலிஸ்மா அதிபரை அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கௌரவமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

தான் பதவி விலக வேண்டுமாயின் அரசியலுக்கு வருவதற்காக தொகுதியை வழங்குமாறும் அல்லது தூதுவர் பதவியை வழங்குமாறும் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு பிரதமர் இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அனைத்துக்கும் முதல் பதவி விலகுமாறும் அதன் பின்னர் கோரிக்கையை ஆராய்ந்து பார்ப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் தினத்தை தனது பிரதேசத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அது முடிவடைந்த பின்னர் பதவி விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார். பிரதமரும் அதற்கு இணங்கியுள்ளார்.

பொலிஸ் தினமும் நிறைவடைந்துள்ளது. எனினும் பொலிஸ்மா அதிபர் இன்னும் பதவி விலகவில்லை என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

wpengine

மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகேளின் பேரில் மன்னாரில் பாடசாலை! றிப்ஹான் திறந்து வைப்பு

wpengine