பிரதான செய்திகள்

பண்டாரவெளி காணியினை அரிப்பு கிராமத்திற்கு வழங்க பலரை தொடர்புகொள்ளும் மாந்தை பிரதேச செயலாளர் கேதீஸ்வரன்! பலர் கண்டனம்

(சிபான்) 

 மன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான வெள்ளிமலை காணியினை அரிப்பு கத்தோலிகர்களுக்கு முன்னால் முசலி பிரதேச செயலாளரும் தற்போதைய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்   செல்லத்துறை கேதீஸ்வரன் சுய முடிவிலும்,தன்னுடைய தேவைக்காகவும் இளைஞர் கழகத்திற்கு வழங்கிய விடயத்தில் தற்போது முசலி பிரதேசத்தில் பாரிய இனமுறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அறியமுடிகின்றது.

மேலும் அறிகையில்

முன்னால் பிரதேச செயலாளர் தான் செய்த சட்டவிரோதமான காணி வழங்களை சீர்செய்து கொள்வதற்காக முசலி பிரதேசத்தில் உள்ள தனக்கு ஆதரவான ஒரு சில அரசியல்வாதிகளுடனும்,ஆதரவாளர்களுடன் தொடர்புகொண்டு பேசுவதாகவும்,இந்த விடயத்தை மூடி மறைக்குமாறு கோரிக்கை விடுவதாகவும் அறியமுடிகின்றது.

அது போன்று முசலி பிரதேச செயலகத்தில் முன்னர் சேவையாற்றிய காணிப்பயண்பாட்டு உத்தியோகத்தர் அரிப்பு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உத்தியோகத்தராகும் ஆவார்.இவர் தான் அதிகமான எல்லைபிரிப்பு விடயத்தில் அரிப்பு கத்தோலிக்க மக்களுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டார். என்ற குற்றச்சாட்டும் பிரதேச மக்களின் முன்வைக்கப்படுகின்றது.

 இது தொடர்பில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவு முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அணியாங்கள் குறித்து அரசியல்வாதிகள்,சமூக சிந்தனையாளர்கள்,அரசாங்க அதிபர்,தற்போதைய பிரதேச செயலாளர் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த தவறுகளையும் செய்யவில்லை

wpengine

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகள் – பிமல் ரத்நாயக்க.

Maash

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine