பிரதான செய்திகள்

பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் இணைத்து கொள்ள வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில்
வலியுறுத்தியுள்ளார்.
தனது பதவிக் காலமான 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகளை எந்தவொரு வேறுபடுத்தலுமின்றி அரச சேவைக்குள் இணைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரமடைந்து 71 ஆண்டுகளாகின்றன. அதேபோன்று இந்த நாட்டில் சுதந்திரமான கல்வியைத் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும் 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது நாட்டில் பல இலட்சம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர். அவர்களில் 57,000 பட்டதாரிகளும் அடங்குவர். 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகள் ஒரே தடவையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர்.

அதன்போது பட்டதாரிகள் உள்வாரி, வெளிவாரி எனவோ, வயது எல்லையின் அடிப்படையிலோ பாகுபடுத்தப்படவில்லை.

அனைவருமே அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அனைத்துப் பட்டதாரிகளும் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தற்போதைய அரசால் உறுதியளிக்கப்பட்டது. சுமார் 50,000 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது.

எனினும் 5,100 பட்டதாரிகள் மட்டுமே அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது நாடு முழுவதும் பதிவு செய்யபட்டுள்ள 57,000 பட்டதாரிகளையும் எந்தவொரு நிபந்தைகளையும் விதிக்காமல் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

wpengine

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களில் விலைகள் குறைப்பு!

Editor

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுபோராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

wpengine