Breaking
Wed. May 8th, 2024

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள்,காணி அபிவிருத்தி அமைச்சின் கட்டடத்திற்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி காலை 9.30 அளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரியும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அதன் முன்னோடியாகவே இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *