பிரதான செய்திகள்

நாளை வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையம் பூட்டு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்தக நிலையங்களையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன அறிவித்துள்ளார்.


வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.


இந்த நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எனவே நகரின் அனைத்து பகுதிகளையும் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதற்கு அமைவாகவே வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன், பொதுப் போக்குவரத்தும் இடம்பெறாது என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் எதிர்ப்பு .

Maash

இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

wpengine

13,570 கோடி மோசடி செய்த மோடி

wpengine