மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையின் கீழ் உள்ள அருவி ஆற்று பகுதியில் இருந்து நானாட்டான் மன்னார் செல்லும் வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையின் காரணமாக இரவு நேரத்தில் பிரயாணம் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போக்குவரத்து சாரதிகள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ;
கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் இரவு நேரத்தில் பிரயாணம் மேற்கொள்வது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும்,பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும்,இன்னும் விரைவாக உரிய இடத்திற்கு சென்று தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர்,கமநல சேவைகள் நிலையம் கவனம் செலுத்தி கட்டாக்காலி மாடுகளை வீதி ஒரங்களின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து சாரதிகள்,பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.